இன்று - பிப்.11 : தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாளையொட்டிய பகிர்வு :
எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும் உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோ கிராப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமா’வைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது...!
1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.
தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே...!
No comments:
Post a Comment